Thursday, March 29, 2007

பொங்கல்!

உங்கள் வீட்டில் பொங்கியது பொங்கல்.
நீ பொங்கலோ பொங்கல் என்றாய்.
அந்தக் குரலுக்குப் பொங்கியது
எங்கள் வீட்டில் பொங்கல்!
**
ஜல்லிக்கட்டுக்கு வந்த

எல்லாக் காளைகளையும்
அடக்கிவிட்டார்கள் வீரர்கள்
ஆனால், ஒரு பசு
எல்லோரையும் தூக்கி வீசிவிட்டுப்
போய்விட்டது..
அது நீதான்!
**
கன்னிப் பொங்கலன்று

பட்டுப் பாவாடை தாவணியில் வந்த நீ
என்னைப் பார்த்ததும் வெட்கத்தில்
உன் தோழிக்குப் பின்னால் ஒளிந்தாய்..
‘இன்று காணும் பொங்கல்
ஒளியக் கூடாது’ என்றேன்.
அதிசயமாய் சொன்ன பேச்சுக் கேட்டாய்..
போற்றி! போற்றி!
இந்த திருநாளுக்கு "காணும் பொங்கல்"
என்று பெயர் வைத்த என் முன்னோர்கள் போற்றி!
**
நீ கடித்துத் துப்பிய கரும்புச்

சக்கை
என் வீட்டு காளை மாட்டுக்கு
சர்க்கரைப் பொங்கல்!
**நன்றி..தபூ சங்கர் ,விகடன்.

0 comments: