கடற்கரை மணலில்
நம் நட்பை எழுதினேன்..
அலை வந்து அடித்து
செல்லவில்லை..
படித்துச்சென்றது...
**
மனம் விரும்பி மரணம் வேண்டும்...
மனம் மகிழ்ந்து மண்ணுள் உறங்க வேண்டும்...
பல மனம் அறியா மரணம் வேண்டும்...
மறுபிறப்பு இல்லா மரணம் வேண்டும்...
மயங்கும் உலகின் மனம் தெரியா மரணம் வேண்டும்...
இதை அடைய
இவ்வுலகில் உலகில் நான் என்ன செய்ய வேண்டும்?
**
நிலவென்று சொல்லாதே..
தேய்ந்து போவேன்..
மலரென்று சொல்லாதே..
உதிர்ந்து போவேன்..
நிழலென்று சொல்..
நித்தமும் இருப்பேன்
நீங்காமல் உன்னுடன்..
**
உலகமே
பனியில்
உறைந்தே போனாலும்..
என் உயிர்
மட்டும்
உன் அன்பில்
உருகிக் கொண்டிருக்கும்..
**
நீ விரும்பும்
உயிர்க்கு
உன் அன்பு
புரியாது..
உனை விரும்பும்
உயிர்க்கு
உனையன்றி
வேரொன்றும் தெரியாது..
**
உலகம்
சொல்லியது
நீதான்
என் நட்பு
என்று..
பாவம்..
அதற்குத் தெரியுமா??
நீதான்
என்
உலகம் என்று!!
**
பல நூறு
வருடங்கள்
ஆகுமாமே
வைரம் ஒன்று
உருவாக??
நீ எப்படி
பத்தே மாதத்தில்
பிறந்தாய்
என் தோழி??
**
'பூக்களைப் பறிக்காதீர்'
உன் அன்பு கட்டளையையும்
அத்துமீறினேன்...
உன் கூந்தலைச் சேராமல்
மலர மாட்டேனென்று
அடம்புடிக்கும்
பூக்களுக்காக...
**
முகம்பார்க்கும் கண்ணாடி கூட
உன் முகத்தைதான்
காட்டுகிறது...
கேட்டால்...
'உன் விழியில்தான் கோளாறு'
என்ற நையாண்டி வேறு...
**
உன் விரல் பிடித்து
நடைபயில ஆசைதான்
என்ன செய்ய?
உன்னை காணும் முன்னே
நடைபழகி விட்டேனே!
**
Friday, March 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment