Wednesday, April 11, 2007

யாரோ சொன்னங்க... பாகம்-2

தரையில் நட!
ஓடு!
தடுக்கி விழுந்தால்
தவழ்ந்து போ!
சலித்துப் போனால்
ஆற்றில் குதி!
முடிந்தால்
எதிர்த்து நீந்து!
அல்லது
ஆற்றோடு போ!
சுழலில் சிக்கினாலும்
கலங்காது போராடு!
முடியாவிட்டால்
மூழ்கிப்போ!
சும்மாயிருந்து
மட்டும்
சுகம் காணாதே..
**

"100% அன்பு செய்,
100% உதவி செய்,
100% மதிப்பு செய்,
- இவை நீ உன்
காதலுனுக்கோ காதலிக்கோ
செய்வதை விட,
முதலில்
உனக்கு நீயே
செய்வது எப்படி
என்று தெரிந்து கொள். "
- ஸ்ரீ நித்யானந்தர்

**
"வெற்றியின் இரகசியங்களை வாழ்வின்
ஒவ்வொரு கணமும் கற்றுக் கொடுக்கிறது,
அதைக் கற்றுக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்."
- ஸ்ரீ நித்யானந்தர்

**
நீ வாழ்க்கையில்
முன்னேற வேண்டுமானால்
உன்னுடைய கால்களால்
நடந்து போ.
ஏனையோரின் முதுகின்
மேல் ஏறிப்போக விரும்பாதே.
அது உனக்கு ஆபத்து!
**
இன்னொரு மனிதன்
இருக்கும்வரை
எவனுமே
அனாதையில்லை
- இரா.பார்த்திபன்
**
தேங்காய், பழம்,
ஊதுபத்தியோட
எல்லாரும்
கோயிலுக்குப்
போவாங்க...
நான் மட்டும்
உன்னோடுதான்
போவேன்.
**
மூன்று நான்குப் பேர்
அந்த முள்ளுக் காட்டிற்குள்
முண்டியடித்து நுழைவோம்.
ஒளியும் ஓணானைக்

கண்ணி வைத்துப் பிடிப்போம்.

ஒருவன்

அதன் கழுத்தில்
குச்சியை அழுத்த
பிளக்கும் வாயில் சிறிது
மூக்குப்பொடியைப் போட..
அது பேயாட்டம் ஆடுவதை
குதியாட்டம் போட்டு ரசிப்போம்.

திடீரென ஒருவன்
ஓணாணின் கண்ணில்
கள்ளிப் பாலை வைக்க
அது துடித்து
உருள்வதைப் பார்த்து
வெடித்துச் சிரிக்கும்
போதெல்லாம் தெரியவில்லை
பின்பு வாழ்க்கைக் காட்டிற்குள்
நானும் ஓர் ஓணாணாவேன்- என்று
**

பிறந்ததில் இருந்து
என்னோடு
என்றென்றும்
விளையாடிக் கொண்டிருப்பது . . .
விதி மட்டும்தான்!
**
நீ = கவிதை
கவிதை = பொய்
நீ = பொய்
**
உலகம் மட்டுமா உருண்டை?
உன் நினைவுகளும் தான்!
உன்னிலே துவங்கி
உன்னிலேயே முடிகின்றன!
**
நெருப்பு மட்டுமல்ல

சிரிப்பும் காயப்படுத்தும்!
காதலித்துப் பார்!
***
"என்னிடம் என்ன பிடித்திருக்கிறது” என்றாய்.
“உன்னிடம் எதுவும் பிடிக்கவில்லை” என்றேன்.
திரும்பிக் கொண்டாய்.
“மொத்தமாய் உன்னையேப் பிடித்த பிறகு
உன்னிடம் எது பிடிக்கிறதென
தனியாக எப்படிசொல்ல?”
**
குளத்தில்
முகம் பார்க்கும் நிலா.
குளிக்காமல்
திரும்பினேன்.
**

0 comments: