Friday, April 13, 2007

நா. முத்துக்குமாரின் ஹைக்கூ முத்துக்கள்!!

குழந்தைகள்
கை காட்டாத
கூட்ஸ் ரயிலில்
இருந்து
கொடியசைத்துப் போகிறான்
கடைசிப் பெட்டியில்
கார்டு.
**
சிறகுகள் உதிர்த்து
வெளிவரும் பறவை
கூண்டிற்கு விடுதலை.
**
பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.
**
பிம்பங்களற்ற தனிமையில்
ஒன்றிலொன்று
முகம் பார்த்தன
சலூன் கண்ணடிகள்.
**
ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம்!
**
காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
அதை
வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!
**
ஆதாம் ஏவாள் கனவில்
ஆப்பிள் துரத்துகிறது
ஆப்பிள் கனவில்
பாம்பு துரத்துகிறது
பாம்பின் கனவில்
சைத்தான் துரத்துகிறது
அனைவரில் கனவிலும்
தோன்றிகடவுள் சொல்கிறார்
காதலித்து கெட்டுப் போங்கள்!
**
உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!
**
நள்ளிரவில் அண்ணா சாலை
நியான் விளக்குகளை
ரசிக்க முடியவில்லை
பஞ்சரான வண்டியுடன் நான் !
**
பொண்டாட்டி தாலியை
அடகு வச்சு
புஸ்தகம் போட்டேன்!
தாயோளி!
விசிட்டிங் கார்டு மாதிரி
ஓசியில் தர வேண்டியிருக்கு
**நன்றி:நா. முத்துக்குமார்

0 comments: