தோல்வி
தோல்வி ஒரு
சிற்பி !
பல வரலாறுகள்
இந்த
சிற்பி செதுக்கியது தான் !
தோல்வி ஒரு
நெருப்பு !
நிறைய தீபங்களை
இந்த
நெருப்புதான் ஏற்றியது !
தோல்வி ஒரு
அணை !
ஏராளமான நதிகள்
இந்த
அணையிலிருந்து கிளம்பின….
தோல்வி என்பது
முடிவல்ல…
இடைவெளி !
தோல்வி ஒரு
அவஸ்தை அல்ல
அவகாசம் !
தோல்வி என்பது
தண்டணை அல்ல !
எச்சரிக்கை !
**
பொங்கல்!
ஐஸ்வர்யா ராயின்
ஆங்கில
பேட்டியுடன்
இனிதே முடிந்தது
தமிழர் திருநாள்!
**
கோலமிடுகிறாயா?
இல்லை
உன் வெட்கத்தை
விரல் வழி
தரைக்குத்
தாரை வார்க்கிறாயா?
**
குடை விரித்தால் மட்டுமா?
நீ இமை விரித்தாலும்
காளைகள் மிரளும்!
**
சிரித்தாய்
வெண்பொங்கல்!
சிணுங்கினாய்
சர்க்கரைப் பொங்கல்!
**
மாட்டுப் பொங்கலுக்கு
டிராக்டருக்குப்
பூமாலை!
அவமானமாய் பார்த்தது
அடிமாடு!
**
நன்றி : பா.விஜய், விகடன்.
Thursday, April 12, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment