Wednesday, May 30, 2007

தபூ சங்கர் கவிதைகள்..2

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே
இருக்கிறது? என்று!"
**
வீட்டிற்கு
ஒரு மரம்
வளர்ப்பார்கள்!
உங்கள்
வீட்டில் மட்டும்
ஏன்
ஒரு மயில்
வளர்க்கிறார்கள்?
**
கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்
எம்பி எம்பிக் குதித்து
கடைசியில்
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.
**
காற்றோடு
விளையாடிக் கொண்டிருந்த உன்
சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்கொண்டாய்!
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.
**
நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பிச் சாப்பிடும்போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகிவிடுகிறது..
**
என்னுடையது
என்று நினைத்துத்தான்
இதுவரையில்
வளர்த்து வந்தேன்.
ஆனால்
முதல்முறை
உன்னைப் பார்த்ததுமே
பழக்க்க்ப்பட்டவர்
பின்னால் ஓடும்
நாய்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு!
**
வருடத்துக்கு ஒரு முறை
சீதா கல்யாணம்
நடப்பது மாதிரி
உன்னையும் நான்
வருடம் ஒரு முறை
திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
**
நீ
யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
**
எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?
பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம்
உட்கார்ந்திரு
போதும்!
**
முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.
நானோ,
ஒரு தேவதையைப்
பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.
**

0 comments: