ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள்
நாம்!
அன்பே!அன்பே!
*
தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?
*
மறப்பதென்றால்
அது முடியவில்லை.
நினைப்பதென்றால்
மனம் சலிப்பதில்லை.
*
நல்ல மழை
பூக்காரி வீடெல்லாம்
(கூடை நிறையப்)
பூவாசம்
*
பாதை நெடுக
'அம்மா தாயே!'
எப்படி சாத்தியம்
ஐஸ்கிரீம் தின்றுச்
சிரித்துப் பேசி... ஓ...
*
ஊருக்குத் திரும்ப
ஒரு வாரம் ஆகும்!
அய்யோ!
நின்று கொண்டேயிருப்பாள்
என் குழந்தை பொம்மை!
*
கூலி விவசாயி!
பசி!
எலி வளைக்குள் நெல்!
*
பழித்துக் காட்டாதே குயிலே!
அந்தக் குழந்தையின் தாய்
உயிரோடில்லை
*
மலரும் பூக்களிலிருந்து
"அம்மா!"
"அம்மா!"..
**
மனித உரிமை பேசி
மரண எதிர்ப்புபேசி
நீளும் பிச்சைக் கைகளில்
உதிரும்
வெள்ளைக்காசு
நக்க
தமிழின் அடம்புக்குள்
நுழையும்
சூழ்ச்சி பொறுத்து
அடையாளத்தேடலுக்கு
அலையும்
சில
மிக நல்ல
மிக மிக மிக
நல்ல நல்ல
முற்போக்குகளும்!
**
முருகனைக்
குப்புறக்கிடத்தி
முதுகில்
வேல் செருகி
விளையாடும்
விநாயக
விளையாட்டின்
வேதனை
உணராமல்
எருக்கம் பூ மாலை
கிளாக்காய்
பிரப்பம் பழம்
காகிதக் குடை
விற்கும்
எம்
நந்தனின் சொந்தங்களாய்
அட்லாண்டிக்கின்
வெளியே
புத்தகக்கடைகள்!
அவாள்களின் விற்பனை
அம்பலத்தாடுவான்
போலே
உள்ளே
உள்ளே
மேலே
மேலே
**
பொட்டலச்சோற்றை
பொறுப்பாய் வாங்கி
இலைச்சோற்றை
ஏகடியம்
செய்யும்
வெட்கங் கெட்ட
தன்நிலை
உணரா
தாழ்வு அறிவுகள்
**
புலம்பெயர்ந்து
பிழைக்கப்
பழகி
துரோகக் காசுகள்
உலுக்கப்பழகி
தங்கை மச்சான்
உறவுகளாக
அழைத்துவந்து
அகதிகள் அல்லல்
அறவே மறந்து
உயர்தர மதுவாய்
தாமிரபரணியின்
குருதியை
ஈழக் கடலின்
குருதியைக்
கலந்து குடித்து
கலந்து குடித்து
தொட்டுக்கொள்ள
எடுக்கும்
சேரனின்
மீன் துண்டுகளில்
இருக்கலாம்
கடலில் சிதறிய
எம்கறும்புலித்
தங்கைகள்
தம்பிகளின்
சதைத் துணுக்குகளும்!
**
நன்றி:அறிவுமதி
Friday, June 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment