Friday, April 13, 2007

யாரோ சொன்னங்க... பாகம்-3

நம் எத்தனை மணி
நேர சந்திப்பின் இறுதியிலும்
எதேனும் சில வார்த்தைகள்
திகம் பேசவே விரும்புகிறேன்!
இனிமேல் வரமாட்டேன்
என்றாவது சொல்லிப்போ!
**
அன்று நடந்த
கவிதைப் போட்டிக்கு
எல்லோரும்
கவிதையோடு
வந்திருந்தார்கள்..
ஆனால்
நீ மட்டும்
உன் கண்களோடு
வந்திருந்தாய்!
**
எத்தனைக் கவிதை
எழுதினாலும்
உன் இதயத்தை
என்னால்
திருட முடியவில்லை..
நீயோ
ஒற்றைப் புன்னகையில்
என்னைக்
கைது செய்து
போகிறாய்!
திருடும் முன்னேக்
கைது செய்யும்
கொடுமைக்காரி நீ!
**
உன் இமைகள்
வேகமாகப் படபடக்கக்
காரணம்
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும்
விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??
**
என்னை காதலிக்கிறாயா?
என்று கேட்க‌
எனக்கு தயக்கம்!

என்னை காதலிகிறீர்களா?
என்று கேட்க
உனக்கு வெட்கம்!

இருவருமே
கேட்டுக்கொண்டோம்!
நாம் காதலிகிறோமா?
**

விழிகள்
நட்சத்திரங்களை வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடு தான்.
**
உன் நினைவுகளை,
என்னில் சுமந்து,
நான் கடந்த பாதையெல்லாம்,
உன் காலடிச் சுவடுகள்.
**
உனக்கும் எனக்கும்
ஏதோ இதுவாம்
ஊரே பேசிக்கொள்கிறது
நிழலே
இதமாய் இருக்க
நிஜத்திற்காய்
ஏங்குகிறது மனசு
**
அந்த விபத்து
நடந்தவுடன்,
எல்லோரும்
ஒரு வினாடி ஸ்தம்பித்து,
மீண்டும் நகர்ந்தனர்
அன்றிரவு,
அவர்கள்
ஒரு வினாடி தாமதமாய்த்
தூங்கப் போயினர்.
**
ஒன்றரை வருடங்களுக்கு
முன்
நீ எழுதிய
கடைசிக் கடிதத்தின்
கடைசி வரிகள்..
"இனிமேல்
இத்தகைய இடைவெளி
இருக்காது
அடிக்கடி கடிதம் எழுதுவேன்."
**
நான் அப்படியே
நானாகத் தெரிவேன்
நான் நானாகத்
தெரிந்தாலும்
கண்ணாடி மனிதனுக்கு
இல்லை
என்னைப் போல்
நிறைய முகங்கள்
**
உனக்குப் பிடித்ததை
எடுத்துக் கொள்
என்றேன்!

உனக்குப் பிடித்ததை
எடுத்துக் கொடு
என்றாய்!

நமக்குள்
அழகாய் தொடர்கிறது
கண்ணாமூச்சி!!
**

மரவியாபாரி
கோடாலியால் மரம்
வெட்டிக்கொண்டிருந்தான்

அது தவறிப் போய்
ஆற்றில் விழுந்தது.

தேவதையை வேண்டி
கொண்டான்.
தேவதையும் தோன்றினாள்.

தங்க கோடாரியை காட்டினாள்;
இல்லையென்றான்.

வெள்ளிக் கோடாரியை காட்டினாள்;
அதுவும்
இல்லையென்றான்.

இரும்புக் கோடாரியை காட்டினாள்;
ஆமாம் யென்றான்
வியாபாரி.

கோடாரியை தலைக்குயர்த்தி
அவனை வெட்டத்
தொடங்கினாள் தேவதை.

அலறிய படியே கேட்டான்...
அய்யோ.. நீ என்ன தேவதை...

அளுங்காமல் சொன்னாள்
அவள்,
வனதேவதைடா....
வனதேவதை...!
**

நீ விலகியதும்
உன்னிடமிருந்து என்னிடம்
ஓடி வருகிறது
காதல்.
என்னிடமிருந்து உன்னிடம்
ஓடிப் போகிறது
என் இதயம்!
**

0 comments: