Tuesday, April 3, 2007

தோழி..

கிழக்கே பார்த்தேன்
விடியலாய் இருந்தாய்
அன்புத்தோழி..
என் ஜன்னலின் ஒரம்
தென்றலாய் வந்தாய்
அன்புத்தோழி..
தனிமையில் இருந்தால்
நினைவாய் இருப்பாய்
அன்புத்தோழி..
நான் இறந்தோ பிறந்தோ
புதிதாய் ஆனேன்
உன்னால் தோழி..

தோழி உந்தன்
வருகையால்
நெஞ்சம் தூய்மையானதடி..
நல்ல தோழி
நல்ல நூலகம்
உன்னால் புரிந்ததடி..

தாகம்
என்று சொல்கிறேன்..
மரக்கன்று
ஒன்றைத் தருகிறாய்..
பசிக்குது
என்று சொல்கிறேன்..
நெல்மணி
ஒன்றைத் தருகிறாய்..

உந்தன் கைவிரல்
பிடிக்கையில்
புதிதாய் நம்பிக்கை பிறக்குது..
உந்தன் கூட
நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது..

என் பயணத்தில் எல்லாம்
நீ
கைக்காட்டி மரமாய் முளைத்தாய்..
என் மனதை உழுது
நீ
நல்ல விதைகளை விதைத்தாய்..
என்னை நானே செதுக்க
நீ
உன்னையே உளியாய் தந்தாய்..
என் பலம் என்னவென்று எனக்கு
நீ
இன்றுதான் உணர வைத்தாய்..

மழையோ
உந்தன் புன்னகை??
மனசெல்லாம்
மெல்ல நனையுதே..
பனியோ
உந்தன் பார்வைகள்??
என் கண்ணிமை
மயிர்களில் தூங்குதே..
வேருக்குள் விழுந்த
நீர்த்துளி
பூவுக்கும்
புத்துயிர் கொடுக்குதே..
உனக்குள் எற்படும்
உற்சாகம்
என்னையும்
குதூகலப் படுத்துதே..

தோழி ஒருத்தி கிடைத்தால்
இங்கு இன்னொரு பிறவி கிடைகும்..
இதுவரை
இந்த உண்மை
ஏன் தெரியவில்லை எவர்க்கும்??

மாற்றங்கள் நிறைந்ததே
வாழ்க்கை..
அதை உன்னால் நானே
உன்னால் நானே
உணர்ந்தேன் தோழி..

படைத்தவன் வந்து
கேட்டால் கூட
உன்னை
கொடுத்திடமாட்டேன்
எந்தன் தோழி..
**நன்றி.. சினேகன்

0 comments: